ஸ்ரீ வேலு தேவர் சித்தர் அவர்கள், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் அவர்களின் சீடர் ஸ்ரீ இராமதேவர் சித்தர் அவர்களின் மறுபிறவியாகப் போற்றப்படுகிறார். மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த அவர், சித்தர் மரபுகளின் வழிவழியாக ஆன்மீக ஞானம் மற்றும் சமூக சேவைகளை தொடர்வதற்காக அவதரித்தவர் ஆவார்.
கடந்த 11 வருடங்களாக ஓங்கார குடிலின் சேவைகள் அனைவருக்குமாக அளிக்கப்பட்டு வருகிறது. இயலாதோருக்கும், பொதுமக்களுக்கும் தினசரி அன்னதானம் திருச்சி நகரின் பல இடங்களில் வழங்கப்படுகிறது. உலக அமைதிக்காகவும், நலத்திற்காகவும் ஸ்ரீ ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார குடிலில் யாகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
முதியோர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தேவையான பொருளுதவி மற்றும் பொருளாதார உதவிகள் செய்யப்படுகின்றன. ஸ்ரீ ஸ்ரீ வேலு தேவர் சித்தர் அய்யா அவர்கள் தன்னை நாடி குடிலுக்கு வருவோருக்கு, தன் கைப்பட உருவாக்கிய மருந்துகளை நோயின் தன்மையை நோக்கி வழங்கி வருகிறார். இதற்கு கட்டணம் எதுவுமில்லை.
ஓங்கார குடில் மூலம் 11 ஆண்டுகளாக அன்னதானம், கல்வி உதவித்தொகை, மற்றும் பிற தொண்டுகள் புரிந்த பிறகு ஆகஸ்ட் 12, 2024 அன்று அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. அறக்கட்டளை உருவாக்கப்பட்ட பிறகு, இந்த சேவைகள் மிகப் பெரிய அளவில் விரிவாக்கப்பட்டன.