For Contact: 9786477007
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ஸ்ரீஸ்ரீ பாம்பாட்டி சித்தர் அய்யாவின் சீடரான, ஸ்ரீ இராமதேவர் சித்தர் அய்யாவின் மறு அவதாரமான எங்கள் குருநாதர் “ஸ்ரீஸ்ரீ வேலு தேவர் சித்தர்” அய்யா இந்த பூமியில் அவதரித்த இந்நன்னாளில் அவர் கீர்த்தியை பகிர்வதில் ஆனந்தம் கொள்கிறோம். பராபவ வருடம் சித்திரை மாதம் 12-ம் தேதி ரிஷப ராசியில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பஞ்சமி திதியில் மாலை 05.00 மணி 18 நிமிடங்களில் 1966-ம் ஆண்டு திங்கள் கிழமையில் ஓர் குழந்தை திருச்சி மண்ணில் ஜனித்தது. பலவருடம் கழித்தே புரிந்தது. அது வெறும் ஜனனம் அல்ல, அவதாரம் என்று. ஆம் நம் குருநாதர் இப்பூவுலகில் அவதரித்த நன்னாள் தான் இது. இந்த வருடம் குரோதி வருடம் சித்திரை 28- ம் நாள் (11-05-2024) அன்று மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சதுர்த்தி திதியில் வருகிறது.
ஓர் மகானின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதாலோ, அவர் மகத்துவங்களை கீர்த்திகளை, அவர் நிகழ்த்திய பல சித்து விளையாட்டுகளை, பல மக்கள் வாழ்வில் நிகழ்த்திய பல அற்புதங்களை அறிந்து கொள்வதாலோ அவற்றை பல முறை படிப்பதாலோ ஒர் மானிடனின் வாழ்வில் பல நல்வித மாற்றங்கள் நடக்கும். படிக்க படிக்க அவனுடைய கர்மங்களும் அகலும்.
சில மகான்களின் சரிதங்களை அவரோடு தொடர்புடைய சில மானிடர்கள் படிக்கும் போது அந்த வார்த்தைகள் எண்ணங்களாய் பிரதிபலித்து அவரை பிரபஞ்சத்தோடு இணைத்து அவரை ஆன்மீகபாதையில் அடுத்த நிலையை அடையவும், பிறப்பின் நோக்கம் அறியவும், முக்தி நிலை அடைவதற்கும் கூட வழிவகுக்கிறது.